குறுந்தொகையில் குற்றியலுகரம் இலக்கணத்தின் பயன்பாடு
The Usage of Kutriyalukaram in Kuruntokai
DOI:
https://doi.org/10.1315/mjt.v4i1.134Keywords:
குறுந்தொகை, குற்றியலுகரம், Kuruntokai, KutriyalukaramAbstract
ஆய்வுச் சுருக்கம்
சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகை, தமிழ்மொழியின் இலக்கிய மற்றும் இலக்கணச் செழுமையை வெளிப்படுத்தும் முக்கிய நூலாகும். இவ்வாய்வு குறுந்தொகையில் இடம்பெறும் குற்றியலுகர இலக்கணத்தின் பயன்பாட்டை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வு பண்புசார் முறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகும். ஆய்வுக் கண்டுப்பிடிப்பானது குறுந்தொகைப் பாடல்களில் காணப்படும் குற்றியலுகரச் சொற்கள் தொகுக்கப்பட்டு, தொல்காப்பிய இலக்கண விதிகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றில், குற்றியலுகரச் சொற்கள் குறுந்தொகையில் அதிகமான அளவில் காணப்படுகிறது என்பதே இந்த ஆய்வின் வழி கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாய்வு, குறுந்தொகையில் வரும் குற்றியலுகரத்தின் பயன்பாட்டை அறிந்து கொள்ள உதவி செய்கிறது.
Abstract
Kuruntokai, one of the anthologies of the Ettuthokai collection in Sangam literature, is an important work that reflects the literary and grammatical richness of the Tamil language. This study aims to examine the usage of Kutriyalukaram (short “u” phonological form) in Kuruntokai. The research was conducted using a qualitative approach. The findings were obtained by identifying and compiling the words containing Kutriyalukaram from the poems of Kuruntokai and analyzing them based on the grammatical principles outlined in the Tolkappiyam. The analysis reveals that words containing Kutriyalukaram occur extensively throughout Kuruntokai. This study contributes to a better understanding of the grammatical significance and usage of Kutriyalukaram in Kuruntokai, thereby highlighting the linguistic richness of Sangam literature.
Downloads
References
தமயந்தி, அ., பழனியப்பன், வே.அ. (2022). குறுந்தொகையில் வாழ்வியல் சிந்தனைகள், சர்வதேசத் தமிழ் ஆய்விதழ், Vol. 4 Iss. S-18. DOI: 10.34256/irjt224s1814
ஆத்தீஸ்வரி, அ. (2025). குறுந்தொகை காட்டும் வாழ்வியல் அறங்களின் பன்முகப் பரிமாணங்களும் சமகாலப் பொருத்தப்பாடும்: ஓர் அக-புற ஆய்வு, தமிழ்மணம் சர்வதேசத் தமிழாய்விதழ், 6(சிறப்பிதழ் 02), 55–63.
கண்மணி ராஜசெல்வி. (2021). குறுந்தொகை பாடல்களில் உளவியல் பார்வை, சர்வதேசத் தமிழ் ஆய்விதழ், Vol. 3 Iss. SPL 1 DOI: 10.34256/irjt21s139
கி.ராம்கணேஷ். (2026). குறுந்தொகை காட்டும் பண்பாட்டுக் கூறுகள். தமிழ்மணம் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ், Vol.7(2). DOI: https://doi.org/10.63300/tm09012026.29
கோகிலா ஸ்ரீராமன், முனிஸ்வரன் குமார். (2025). மூதுரையில் குற்றியலுகர இலக்கணத்தின் பயன்பாடு, மலேசியத் தமிழ் ஆய்விதழ், Vol. 3(1), 13-25.
கௌசல்யா லட்சுமி ஜெய்சங்கர். (2023). சங்கக்கால அக இலக்கியங்களில் காணப்படும் காதல் சார்ந்த உவமைகள், மலேசியத் தமிழ் ஆய்விதழ், eISSN:2990-9694.
சத்யா, செ. (2021). குறுந்தொகையில் உள்ளுறை – இறைச்சி, Muallim Journal of Social Sciences and Humanities, Vol.5(4). DOI: https://doi.org/10.33306/mjssh/157
செ. சீனி நைனா முகம்மது. (2013). நல்ல தமிழ் இலக்கணம். உங்கல் குரல் எண்டர்பிரைசு
திருக்கண்ணபுரத்தான் திருமலைச்செல்வப் பெருமாளரங்கன். குறுந்தொகை மூலமும், புத்துரையும். ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் ஆசிரமம்.
வரதராசன், மு. (1956). குறுந்தொகை விருந்து. பாரி நிலையம்.
ஜெயஸ்ரீ சுப்பிரமணியம், மனோன்மணி தேவி அண்ணாமலை. (2025). திருக்குறளில் குற்றியலுகரம் இலக்கணத்தின் பயன்பாடு – ஓர் ஆய்வு, மலேசியத் தமிழ் ஆய்விதழ், Vol. 3(1), 40-47.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2026 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

