சிற்றிலக்கியத்தில் மெய்ப்பாட்டியல்

Meipaadu in Sitrilakkiyam

Authors

  • Prof. Dr. Pannirukai Vadivelan VELS University
  • Assoc. Prof. Dr. Manonmani Devi M.A.R Annamalai Faculty of Languages and Communication, Sultan Idris Education University
  • Ms. S. Vijalakshmi VELS University

DOI:

https://doi.org/10.1315/mjt.v3i2.125

Abstract

ஆய்வுச் சுருக்கம்
இக்கட்டுரை தமிழ் சிற்றிலக்கியங்களில் வெளிப்படும் பல்வேறு மெய்ப்பாடுகளை (உணர்ச்சிகளின் உடல்சார் வெளிப்பாடுகள்) ஆராய்கிறது. தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்ப்பாட்டியல் கோட்பாடுகளின் அடிப்படையில், சிற்றிலக்கியங்கள் எவ்வாறு மனித உணர்வுகளைப் பதிவு செய்துள்ளன என்பதை இது விளக்குகிறது. குறிப்பாக, பக்தி இலக்கியங்களில் வெளிப்படும் இறைக்காதல் மற்றும் சரணாகதி உணர்வுகள், பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் பிரதிபலிக்கும் கனிவான தாய்மை உணர்வுகள், மற்றும் பரணி இலக்கியங்களில் விவரிக்கப்படும் வீரம், அச்சம், அவலம் போன்ற போர்க்கள மெய்ப்பாடுகள் குறித்து இக்கட்டுரை விரிவாக எடுத்துரைக்கிறது. திருக்கைலாய ஞான உலா, பெரியாழ்வார் திருமொழி, கலிங்கத்துப் பரணி போன்ற இலக்கியச் சான்றுகளின் வழி, சிற்றிலக்கியங்கள் வெறும் சொற்களஞ்சியமாக மட்டுமன்றி, மானுட உணர்ச்சிகளின் உயிரோட்டமான கருவூலமாகத் திகழ்வதை இவ்வாய்வு உறுதி செய்கிறது.

Abstract
This paper explores the manifestation of Meippadu—the physical expression of internal emotions—within the genre of Tamil Minor Literature (Sittrilakkiyam). Drawing upon the aesthetic theories established by Tholkappiyar, the study analyzes how various emotional states are artistically rendered in these literary works. The research focuses on several key dimensions: the expression of divine love and surrender in Devotional Literature (e.g., Thirukailaya Gnana Ula); the tender nuances of maternal affection portrayed in Pillaithamil (e.g., Periyazhwar Thirumozhi); and the intense depictions of heroism (Veeram), fear, and pathos in war-centric literature like Parani (e.g., Kalingathu Parani). By examining these texts, the article demonstrates that Sittrilakkiyam serves as a vital repository of human emotions, bridging the gap between internal feelings and external physical manifestations, thereby ensuring the timeless relevance and vitality of these literary forms.

Downloads

Download data is not yet available.

References

குமரகுருபரர். (1866). மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ். தஞ்சாவூர்.

சண்முகம்பிள்ளை, மு. (பதி.). (2007). தொல்காப்பியம் (இளம்பூரணர் உரை). பாரி நிலையம்.

சிவபெருமான் (மூலம்), சேரமான் பெருமாணாயனார். (1936). திருக்கைலாய ஞான உலா. மாடல் அச்சுக்கூடம்.

சுப்பிரமணிய முதலியார், C. K. (உரை). (1950). திருவாரூர் மும்மணிக் கோவை. ஞானசம்பந்தப் பிரசுரம்.

சோமசுந்தர பாரதியார், ச. (1997). தொல்காப்பியம் பொருட்படலப் புத்துரை. வசுமதி பதிப்பகம்.

ஞானமூர்த்தி, தா. ஏ. (2011). இலக்கியத் திறனாய்வியல். ஐந்திணைப் பதிப்பகம்.

புலியூர்க்கேசிகன் (உரை). (2021). கலிங்கத்துப் பரணி: மூலமும் உரையும். சாரதா பதிப்பகம்.

பேராசிரியர் (உரை). (2018). தொல்காப்பியம். சாரதா பதிப்பகம்.

ஜகந்நாதன், கி. வா. (பதி.). (1985). அற்புதத் திருவந்தாதி. அமுதநிலையம்.

ஸ்ரீ நிவாசாசாரியார் சுவாமி, தி. (1936). பெரியாழ்வார் திருமொழி. ஸ்ரீ ஜனார்த்தன பிரிண்டிங் ஒர்க்ஸ்.

Published

25-12-2025

How to Cite

Pannirukai Vadivelan, Manonmani Devi M.A.R Annamalai, & S. Vijalakshmi. (2025). சிற்றிலக்கியத்தில் மெய்ப்பாட்டியல்: Meipaadu in Sitrilakkiyam. Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 3(2), 43–48. https://doi.org/10.1315/mjt.v3i2.125

Most read articles by the same author(s)

1 2 > >>