The ‘Periyor’ and ‘Siriyor’ Terms Defined by Ancient Tamil Literature

பண்டைத் தமிழ் இலக்கியம் வரையறுத்த பெரியோரும் சிறியோரும்

Authors

  • Sharan Suklam Sultan Idris Education University
  • Megaladevi Sultan Idris Education University
  • Manonmani Devi Sultan Idris Education University

Keywords:

பெரியோர், சிறியோர், பண்டைத் தமிழ் இலக்கியம், Periyor, Siriyor, Ancient Tamil Literature

Abstract

எல்லாத் தமிழ்ச்சொற்களும் பொருள் குறிப்பதோடு அதன் தன்மையையும் விளக்குகின்றது என்பதை தொல்காப்பிய நூற்பாக்களின் வழி அறிய முடிகின்றது. அதுபோல, நமது தமிழ்மொழிப் புழக்கத்தில் பன்னெடுங்காலமாக இருந்துவரும் சொற்களான சிறியோர், பெரியோர் எனும் சொற்களின் உண்மைப் பொருளையும் அதனை இலக்கியம் பண்டைக் காலம் தொடங்கி வரையறுத்த தன்மைகளையும் இக்கட்டுரை விளக்கியுள்ளது. பெரியோர் என்பதற்கான இரு வேறு வகைப் பொருள்களும் சிறியோர் எனும் சொல்லுக்கான பல்பொருள்களும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. நூலக ஆய்வாகத் தேவைக்கான தரவுகள் யாவும் பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களில் இடம்பெற்ற பாடல்களின் வழி ஆராயப்பட்டன. தொல்காப்பியம் தொடங்கி நறுந்தொகை வரை ஏழு வகையான இலக்கிய நூல்களிலிலிருந்து பெரியோர், சிறியோர் ஆகிய சொற்கள் இடம்பெறும் பாடல்கள் கண்டறியப்பட்டன. சேகரித்த தரவுகளை விளக்கமுறையில் பகுப்பாய்வு செய்து பண்டைக்காலம் உணர்த்தும் பெரியோர், சிறியோரின் சொற்பொருள்களையும் அதற்கான தன்மைகளையும் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளாக வழங்கப்பட்டுள்ளன. பெரியோரெனப்படுபவர், ஒழுகலாற்றிலும் பெருமையிலும் நற்குணங்களிலும் நல்ல மனத்திலும் பண்பிலும் கல்வியிலும் பிழை பொறுக்கும் திறத்திலும் உயர்ந்திருப்பவர் மட்டுமே. இத்தகைய தன்மைகளில் சற்றும் குறைந்தோர் சிறியோராகக் காணப்படுகிறார்.

 

All Tamil words indicate meaning and also explain its nature. This has been explained clearly in Tholkappiyam Noorpa. Similarly, this article has explained the true meaning of the words 'Siriyor' and 'Periyor', which have been in our Tamil language since ages, and the characteristics that have been defined by our literatures since ancient times. Two different meanings of ‘Periyor’ and a few different meanings of ‘Siriyor’ has been explained in this article. All the data required for bibliographic research were examined through the songs found in ancient Tamil literatures. Songs containing the words ‘Periyor’ and ‘Siriyor’ were identified from seven types of literary texts from Tholkappiyam and Narunthogai. Analyzing the collected data descriptively, the semantics and characteristics of the ‘Periyor’ and ‘Siriyor’ people who perceive the ancient times and their characteristics have been presented as the findings of this study. ‘Periyor’ are the ones who are superior in morals, pride, virtues, good mind, character, education and fault tolerance. Lack of these characters are seen as ‘Siriyor’.

Downloads

Download data is not yet available.

References

அருளம்பலவாணர், ச. (2021). பதிற்றுப்பத்து - ஆராய்ச்சியுரை. வடமாகாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.

குமாரசாமி, ச. (1988). வாக்குண்டாம் மூலமும் உரையும். கொழும்பு: பூபாலசிங்கம் புத்தகசாலை.

கேசிகன், ப. (2012). தொல்காப்பியம் (எழுத்து - சொல் - பொருள்). (எ. கௌமாரீஸ்வரி, Ed.) சென்னை: சாரதா பதிப்பகம்.

கேசிகன். (2010). புறநானூறு மூலமும் உரையும். சென்னை: சாரதா பதிப்பகம்.

சாந்தி, ந. (2006). ஔவையார் அறிவுச் செல்வங்கள். கொழும்பு: இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம்.

சிங்காரவேலு, ச. (2014). திருக்குறள் பொருளுரை. கோலாலம்பூர்: உமா பதிப்பகம்.

சோதிநாதன், ஆ. (2017). உமா நற்றமிழ்ப் பேரகராதி. கோலாலம்பூர்: உமா பதிப்பகம்.

சோதிநாதன். (2013). நறுந்தொகை - உரையுடன். கோலாலம்பூர்: உமா பதிப்பகம்.

தமிழண்ணல். (2009). தொல்காப்பியம். மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.

தமிழண்ணல். (2010). தொல்காப்பியம் - பொருளதிகாரம் (தொகு. 2). மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.

மனோன்மணி தேவி. (2019). தொல்காப்பியத் தேன் துமிகள். கோலாலம்பூர்: உமா பதிப்பகம்.

Published

26-12-2023

How to Cite

Sharan Suklam, A., Megaladevi, V., & Manonmani Devi, A. (2023). The ‘Periyor’ and ‘Siriyor’ Terms Defined by Ancient Tamil Literature: பண்டைத் தமிழ் இலக்கியம் வரையறுத்த பெரியோரும் சிறியோரும். Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(2), 15–21. Retrieved from https://kpatmalaysia.com/ojs/index.php/mjt/article/view/49