'Angatham' in 'Thenkoodu' Traditional Poetry Collection
தேன்கூடு கவிதைத் தொகுப்பில் அங்கதச்சுவை
Keywords:
அங்கதம், தேன் கூடு, மரபு கவிதை, உத்தி, Angatham, Then koodu, Traditional Poetry, TechniqueAbstract
பொருள்கோள் முறையும் அணியிலக்கணங்களும் பண்டைய காலந்தொடங்கி மரபு கவிதைகளில் காணப்படும் முக்கியமானதொரு உத்தியாகத் தென்படுகின்றது. சொல்ல வரும் கருத்தினையும் அது வெளிப்படுத்தும் உணர்ச்சிகளையும் கருத்தில் ஏற்றி படைக்கப்படும் முறையே உத்தியாகக் கொள்ளப்படுகின்றது. இவ்வுத்தி முறையில் அங்கதம் எனும் நகைச்சுவை, புலமை நுட்பம், திறனாய்வுப் பார்வை ஆகியவைகளை உள்ளடக்கிய உத்தியாகவே இது தோன்றுகிறது. இவ்வுத்தியை, இறையருட் கவிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்கள் தமது ‘தேன்கூடு’ தமிழ்க்கவிதைத் தொகுப்பில் எவ்வகையில் கையாண்டுள்ளார் என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இக்கவிதை நூலில் வரையறுக்கப்பட்ட செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதத்தின் இரு கோணங்களும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழில் மறுமலர்ச்சிக்குப் பிறகு தோன்றிய பல தமிழ் இலக்கிய வடிவங்களில் அங்கதம் ஓர் இலக்கிய உத்தியாகக் கையாளப்பட்டு வருகின்றது. தேன்கூடு கவிதைத்தொகுப்பில் கவிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்கள், அங்கத உத்தியைப் பயன்படுத்தி மனித மனத்தின் கொட்டத்தையும் சமுதாயத்தின் இழிநிலையையும் தமிழர்களின் நன்றிகொல்லும் இழிகுணத்தையும் கிண்டல் செய்யும் போக்கில் சாடியுள்ளார். இவர்தம் கவிதைகள் முழுவதும் அங்கதச்சுவை பரவலாகக் காணப்படுகின்றது.
The usage of ‘Ani Ilakkanam’ and ‘Porul Kol’ appears to be an important technique found in traditional poetry dating back to ancient times. A Technique commonly known as ‘Uththi” is a method created by considering the idea to be expressed and the emotions it expresses. In this Technique, it appears to be a strategy that includes humor, scholarly thoughts, and critical perspective. This technique was used by the great poet S. Seeni Naina Mohamed from Malaysia in his various poems. The purpose of this article is to study how S. Seeni Naina Mohamed has handled it in his collection of Tamil poetry 'Thenkoodu'. In this poetry, both aspects of the ‘Chemporul Angatham’ and the ‘Palikarappu Angatham’ were found. Angatham is used as a literary technique in many forms of Tamil literature that emerged after the renaissance in Tamil. Poet S. Seeni Naina Mohamed in ‘Thenkoodu’ Poem Collection used Angatham technique to criticize the sting of the human mind and the ignominy of society and the ungrateful ignominy of Tamils. Angatham technique is widely found throughout his poems
Downloads
References
இளம்பூரணர், தொல்காப்பிய உரை விளக்கம்.
சீனி நைனா முகம்மது, செ., (2014). தேன்கூடு, உங்கள் குரல் எண்டர்பிரைசு, பினாங்கு.
சுப்பிரமணியன், ச., வே. (2009). தொல்காப்பியம் அறிமுகம், மணிவாசகர் பதிப்பகம்.
நடராசன், மா. (2008). இலக்கிய மேய்ச்சல், நியூ செஞ்சரி புக்ஹவுஸ்(பி)லிட், சென்னை.
பஞ்சாங்கம், க. (2011). இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம் வெளியீடு, தஞ்சாவூர்.
பாலசுப்பிரமணியன்., சி. (1980). நெஞ்சின் நினைவுகள். திருமலர் பதிப்பகம். சென்னை.
பாலசுப்பிரமணியன்., மு., பி. (1999). இலக்கியப் புதையல், பூம்புகார் பதிப்பகம்.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

