நற்றிணையில் உவம உருபுகளின் பயன்பாடு: ஓர் ஆய்வு
A Study on the Use of Simile Markers in Natrinai
DOI:
https://doi.org/10.1315/mjt.v4i1.142Keywords:
Natrinai, Simile, Tholkappiyam, nannul, Sangam LiteratureAbstract
ஆய்வுச் சாரம்
இவ்வாய்வு நற்றிணைப் பாடல்களில் இடம்பெறும் உவம உருபுகளின் பயன்பாட்டை ஆராயும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது. தொல்காப்பிய உவமையியல் கோட்பாடுகளும் நன்னூல் இலக்கண மரபும் இவ்வாய்வின் கோட்பாட்டு அடித்தளமாக அமைக்கப்பட்டுள்ளன. பண்புசார் ஆய்வு அணுகுமுறையையும் விளக்கவியல் பகுப்பாய்வு முறையையும் அடிப்படையாகக் கொண்ட இவ்வாய்வில், நற்றிணையில் இடம்பெறும் 400 பாடல்களுள் 39, 84, 85, 167, 204, 252, 253, 264, 393 ஆகிய ஒன்பது பாடல்கள் நோக்கமுடைய மாதிரித் தேர்வு முறையின் வழி ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களில் இடம்பெறும் அன்ன, போல, புரையும், புரை, ஒப்பின், ஏய்ப்ப, கடுப்ப, மருள், ஏர், இன் ஆகிய பத்து உவம உருபுகள் ஆய்வுத் தரவுகளாகக் கொள்ளப்பட்டன. இவ்வுருபுகள் இடம்பெறும் பாடல் வரிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் உவமானம், உவமேயம், பொருள், பாடல் சூழல் மற்றும் உவமை வகை ஆகியவை பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆய்வின் முடிவில், உவம உருபுகள் தலைவியின் அழகு, உடல் அமைப்பு, நெற்றி, கண், தோள், பாதம், காவல் நிலை, பிரிவு உணர்வு, மனநிலை மாற்றம் மற்றும் இயற்கைக் காட்சி ஆகியவற்றைத் தெளிவாகவும் காட்சிநயத்துடனும் வெளிப்படுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது கண்டறியப்பட்டது. மேலும், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட உவம உருபுகள் மெய், உரு, பயன் ஆகிய உவமை வகைகளோடு தொடர்புபட்டு, பாடல்களின் உணர்ச்சி ஆழத்தையும் பொருள் நயத்தையும் செறிவுபடுத்துகின்றன என்பதும் புலனாகிறது. ஆகவே, நற்றிணையில் உவம உருபுகள் இலக்கணக் கூறுகளாக மட்டுமன்றி, சங்க அக இலக்கியத்தின் அழகியல் வெளிப்பாட்டை வலுப்படுத்தும் முக்கியமான இலக்கிய உத்திகளாகவும் செயல்படுகின்றன என்பதை இவ்வாய்வு நிறுவுகிறது.
Abstract
This study examines the use of simile markers in Natrinai, one of the anthologies of the Ettuthokai corpus in Sangam literature. Natrinai is distinguished by its refined portrayal of love-related emotions, human experiences, and natural settings. The study is grounded in the grammatical principles of simile presented in Tolkāppiyam and the grammatical tradition of Nannūl. A qualitative research approach, supported by descriptive textual analysis, was employed. From the 400 poems contained in Natrinai, nine poems, namely Poems 39, 84, 85, 167, 204, 252, 253, 264, and 393, were selected through purposive sampling. Ten simile markers—anna, pōla, puraiyum, purai, oppin, ēyppa, kaṭuppa, maruḷ, ēr, and in—were identified as the primary research data. The selected poetic lines were analysed according to their comparative objects, subjects of comparison, contextual meanings, and corresponding categories of simile. The findings reveal that these markers are used to describe the heroine’s beauty, physical features, guarded condition, emotional changes caused by separation, and various aspects of natural imagery. The analysis further indicates that the identified markers are associated with the categories of mey, uru, and payan, and contribute significantly to the visual, emotional, and aesthetic qualities of the poems. Thus, simile markers in Natrinai function not merely as grammatical elements but also as important literary devices that enhance meaning, imagery, and emotional depth. The study also demonstrates the close relationship between classical Tamil grammatical traditions and the artistic expression found in Sangam poetry.
Downloads
References
கௌசல்யா லெட்சுமி, ஜெ. (2023). சங்கக்கால அக இலக்கியங்களில் காணப்படும் காதல் சார்ந்த உவமைகள். Malaysian Journal of Tamil, 1(2), 107–112. Retrieved from https://kpatmalaysia.com/ojs/index.php/mjt/article/view/62
பவணந்தி முனிவர். (1999). நன்னூல் மூலமும் விருத்தியுரையும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
புலியூர்க் கேசிகன். (2001). நற்றிணை: 201–400 செய்யுட்கள். பாரி நிலையம்.
மலையாண்டி, ப. (2025). நற்றிணையில் உடம்படுமெய். Journal of Valartamil, 6(2), 98–105. https://doi.org/10.37134/jvt.vol6.2.10.2025
ராகிணி இரமதாசு, ர., & அண்ணாமலை, ம. தே. (2025). பெரும்பாணாற்றுப்படையில் ‘உவமை’ இடைச்சொல்லின் பொருள் ஒப்புமை பயன்பாடு. Malaysian Journal of Tamil Studies, 3(2), 8–17.
ராகிணி இரமதாசு, ர., & கணபதி, க. (2025). குறிஞ்சிப்பாட்டில் ‘உவமை’ இடைச்சொல்லின் பொருள் ஒப்புமை பயன்பாடு. Malaysian Journal of Tamil Studies, 3(2), 26–31.
வெள்ளைவாரணன், க. (1985). தொல்காப்பியம்: உவமையியல் உரைவளம். மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2026 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

