Asarak Kovaiyil Kaanum Vaazhviyal Koorukal

ஆசாரக் கோவையில் காணும் வாழ்வியல் கூறுகள்

Authors

  • Parameswari Smk Canossion Convent

Keywords:

ஆசாரக் கோவை, வாழ்வியல் கூறுகள், Asarak Kovai, Elements of Life

Abstract

சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்களைச் சேர்த்துப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. அதில் ஆசாரக் கோவை எனும் நூலும் அடங்கும். இந்நூலை இயற்றியவர் கயத்தூர் பெருவாயின் முன்னியார். அடிப்படை ஒழுக்கங்களைத் தவிர நாள்தோறும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியவை இவை, தவிர்க்க வேண்டியவை இவை என்பதையும் இந்நூல் தெளிவாகக் கூறுகின்றது. இவ்வாய்வானது பண்புசார் அணுகுமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்கான தரவுகள் யாவும் நூலக ஆய்வு அணுகுமுறையில் எடுத்தாளப்பட்டுள்ளன. இந்த நூலக ஆய்விற்கு ஏற்ற நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி விளக்கமுறை அணுகுமுறையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வு முழுமையாக நூலக ஆய்வு அணுகுமுறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், தேவைக்கான தரவுகளை முதலில் நூல்கள், ஆய்வுக் கட்டுரைகளின் வழி சேகரிக்கப்பட்டது. மனிதப் பண்புகளும் வாழ்வியல் அறங்களும் சரிந்து கொண்டிருக்கும் இன்றைய இந்தியச் சமுதாயத்தை மீட்டுக் கொண்டுவர ஆசாரக் கோவையின் பாடல்கள் பெரிதும் உதவும் என்று இந்த ஆய்வின் வழி அறியப்படுகிறது.

 

18 texts composed during Sangam Maruviya period are given as eighteen texts. It also includes the book Asarak Kovai. The author of this book was the predecessor of Gayathur Peruvai. Apart from the basic morals, this book also clearly states that these are the things that should be followed in daily life and these are the things that should be avoided. This study has been carried out in qualitative approach. All the data for this review were collected using bibliographic research approach. This research has been carried out in a descriptive approach using books, research articles etc. suitable for this library study. As this research has been carried out entirely through bibliographic approach, the required data was first collected through books and research articles. Through this study it is known that the songs of Asarak Kovai will help greatly in bringing back the present-day Indian society where human qualities and moral values are declining.

Downloads

Download data is not yet available.

References

கலியாணராமன் தி.சு. (2007). ஆசாரக்கோவை (தெளிவுரை,கருத்துரை,விளக்கம் . சென்னை : செந்தமிழ் பதிப்பகம்

சீனி நைனா முகம்மது.செ (2007). தமிழ்ச்செம்மொழி சிறப்பு மலர் .பினாங்கு : உலகத் தமிழர் பதிப்பகம்

சுப்ரமனியன் ச.வே (2007).பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் .சென்னை : மெய்யப்பன் பதிப்பகம்

மலேசியத் தமிழாய்வு மன்றம் & தமிழ்ப் பிரிவு , சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்க்ழகம். (2016). தமிழ்க்கல்வி ஆய்விதழ். கோலாலும்பூர்: உமா பதிப்பகம்.

Published

30-12-2023

How to Cite

Parameswari, M. (2023). Asarak Kovaiyil Kaanum Vaazhviyal Koorukal: ஆசாரக் கோவையில் காணும் வாழ்வியல் கூறுகள். Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(2), 252–258. Retrieved from https://kpatmalaysia.com/ojs/index.php/mjt/article/view/83