Multimodal Visual Analysis of Traditional Poetry in Tamil Language Textbook

தமிழ்மொழிப் பாடப் புத்தகத்திலுள்ள மரபு கவிதைகளில் இடம்பெற்றுள்ள படங்களின் பன்முகத்தன்மை (Multimodality)

Authors

  • Ratha University Malaya
  • Thanalachime University Malaya
  • Selvajothi University Malaya

Keywords:

மரபு கவிதை, பன்முகத்தன்மை, பாடப்புத்தகம், தொழில்நுட்பம், 21ஆம் நூற்றாண்டுக் கல்வித் திட்டம்

Abstract

இருபத்தியோராம் நூற்றாண்டில் கல்வி மாற்றங்களின் சவால்களை எதிர்கொள்ள பல்வேறு திறன்களும் கருவிகளின் பயன்பாடும் அவசியம். இன்றைய மாணவச் சமூகம் நவீன கால யுகத்திற்கு ஏற்றாற்போல் கற்றல் கற்பித்தலிலும் மாற்றங்களை விரும்புகின்றனர். மாணவர்களின் கல்வியறிவுத் திறன்களைச் செழுமைப்படுத்த புதிய புதுப்பித்த நுட்பங்களின் பயன்பாடு மிக மிக அவசியம். ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தலின் மிக முக்கியமான பாடத்துணைப்பொருளாகப் பாடப்புத்தகங்கள் விளங்குகின்றன. முதலாம் ஆண்டு தொடங்கி படிவம் ஐந்து வரையிலான பாடப்புத்தகங்கள் கால வரையறைக்கு ஏற்ப மாற்றம் கண்டு புதிய வடிவமைப்பில் உள்ளன. தொடக்கத்தில் பாடப்புத்தகத்திலுள்ள படங்கள் வாசிப்புப் பகுதியின் உரையின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் மட்டுமே அமைந்திருந்தன. ஆனால், தற்போது அவை மொழியைக் கற்றுக்கொள்ளும் வகையில் அமைந்திருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்பக் கல்வித் துறையில் பல மாற்றங்களும் புதியக் கண்டுபிடிப்புகளும் உருவாகியுள்ள போதிலும் பாடப்புத்தகத்தின் பயன்பாட்டின் அவசியம் ஈடுஇணையற்றது. ஆக, இந்த ஆய்வின் நோக்கமானது  தமிழ்மொழிப் பாடப்புத்தகத்திலுள்ள மரபுக்கவிதைகளில் இடம்பெற்றுள்ள படங்கள் பன்முகத்தன்மையில் (multimodality) அமைந்திருக்கின்றதா என்பதை ஆராய்வதே ஆகும். நான்காம் படிவ தமிழ்மொழிப் பாடப்புத்தகம் இவ்வாய்வுக்குத் தரவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வானது Kress & van Leeuwen (2006) கோட்பாடுகளின் அடிப்படையில் தரவியல் முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. பன்முகத்தன்மை (multimodality) என்பது மொழியியலில் பயன்படுத்தப்படும் ஒரு புதியக் கோட்பாடாகும். பன்முகத்தன்மை கூறுகளைக் கொண்ட படங்களை உட்புகுத்திய மரபு கவிதைகளைக் கற்பதன் வழி கவிதையை மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்வர். இஃது அவர்களின் மனவளர்ச்சியையும் அறிவு வளர்ச்சியையும் மேம்படுத்தும். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பாடப்புத்தகத்தில் மரபு கவிதைகளில் இடம்பெற்றுள்ள படங்கள் தயாரிப்பின் தரத்தை மேம்படுத்த உதவும். இந்த ஆய்வு புத்தக வெளியீட்டாளர் திறம்பட பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதற்கான வழிகாட்டலை உருவாக்க முடியும். தமிழ்மொழிப் பாடப்புத்தகத்தில் உரைநடை மட்டுமல்லாது மரபு கவிதைகளுக்கும் காட்சிக் கூறுகளின் அடிப்படையிலும் தனிமனிதப் பொருளின் அடிப்படையிலும் பகுப்பாய்வு செய்வது இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது. எனவே, மரபு கவிதைகளுக்குக் கொடுக்கப்பட்ட படங்களில் பன்முகத்தன்மை கூறுகளை மிகவும் துல்லியமாகவும் திறமையாகவும் பயன்படுத்துவதற்கான விளக்கத்தை இந்த ஆய்வு தெளிவாக வழங்கும்.

 

The use of different skills and tools is necessary to meet the challenges of educational changes in the twenty-first century. Today's student society wants changes in learning and teaching to suit the modern world of education. The use of new and up-to-date techniques is necessary to enrich students' literacy skills. Textbooks are the most important teaching aids for teachers. The textbooks starting from Year 1 to Form 5 have been revised according to the time frame and are in a new format. Initially the pictures in the textbook were only meant to help understand the content of the text in the reading section. But now they are geared towards learning the language. Despite the many changes and innovations in the field of education with the advancement of technology, the need for the use of textbooks is unmatched. Therefore, the purpose of this study is to investigate whether the images in the traditional poems in the Tamil language textbook are multimodality. Form 4 Tamil language textbook will be used as data for this review. This study will be statistically analyzed based on the theory of Kress & van Leeuwen, (2006). Multimodality is a new theory used in linguistics. Students can easily understand poetry by learning traditional poems that incorporate images with multimodality elements. This will improve their mental development and intellectual development. The findings of this study will help to improve the quality of the production of pictures in traditional poetry in the textbook. This study can help the textbook publisher develop guidelines for producing textbooks effectively. Therefore, this study will clearly provide an explanation for the more accurate and efficient use of diversity elements in traditional poetry.

Downloads

Download data is not yet available.

References

Ajayi, L. (2009). English as a second language learners‟ exploration of multimodal texts in a junior high school. Journal of Adolescent & Adult Literacy, 52(7), 585-595.

Alvarez, J. (2016). Meaning making and communication in the multimodal age: ideas for language teachers. Colombian Applied Linguistics Journal, 18(1), 98-115.

Benavot, A., & Jere, C. (2016). Gender bias is rife in textbooks. Retrieved from: https://gemreportunesco.wordpress.com.

Goldstein, B. (2016). Online video genres and student creation. Retrieved from https://www.youtube. com/watch?v=SbgZjlOxGKI

G. Kress and T. van Leeuwen, Reading images: The grammar of visual design, New York: Routledge, 2006.

Jewitt, C. 2002. The move from page to screen: The multimodal reshaping of school English. Journal of Visual Communication, 1(2), 171-196.

Kasmaienezhadfard, S., Pourrajab, M., & Rabbani, M (2015). Effects of pictures in textbooks on students‟ creativity. Multi Diciplinary Edu Global (Quarterly), 4(2), 83-96.

Kress, G. and van Leeuwen, T. 2006. Reading Images: The Grammar of Visual Design. (2nd Edition) London: Routledge.

Ladin, C. A., Omar, I. M., Balakrishnan, V., Kamaruddin, A. Y., & Mamat, S. (2021). Konsep Dan Aplikasi Kemahiran Melakar Aras Tinggi (KMAT) Dalam Pengkaryaan Seni Visual Pelajar Sekolah Menengah: Concepts and Applications of High-Level Sketch Skills (HLLS) in Visual Artwork for Secondary School Students. Sains Insani, 6(2).

Marefat, F., & Marzban, S. (2014). Multimodal Analysis of Gender Representation in ELT Textbooks: Reader’s Perceptions. Procedia-Social and Behavioral Sciences, 98, 1093-1099.

Mohd Nazri Abdul Rahman, Norlidah Alias, Saedah Siraj & Zaharah Hussin. 2013. Inovasi Dan Kreativiti Dalam Rekabentuk Buku Teks Sekolah Menengah: Aplikasi Pendidikan Interpretive Structural Modelling (ISM), dlm JuKu: Jurnal Kurikulum Dan Pengajaran Asia Pasifik, Bil. 1, Isu 1; 1-9.

Serafini, F. (2012a). Expanding the four resources model: Reading visual and multi-modal texts. Pedagogies: An International Journal, 7(2), 150-164.

Serafini, F. (2012b). Reading multimodal texts in the 21st century. Research in the Schools, 19(1), 26-32

Sewell, W. C., & Denton, S. (2011). Multimodal literacies in the secondary English classroom. English Journal, 100(5), 61-65.

Shabiralyani, G., Hasan, K. S., Hamad, N., & Iqbal, N. (2015). Impact of visual aids in enhancing the learning process case research: District Dera Ghazi Khan. Journal of Education and Practice, 6(19), 226-234.

Silva, M. D. (2016). Accounting for multimodality in an EFL textbook: analysing activities and suggesting ways to approach multimodal texts. Diálogo das Letras, 5(2), 92-109.

Tan, L., Guo, L., & Chia, A.L. (2009). Teaching English in new times. In P. Teo, T.M. Yin, & C. Ho (Eds.), Exploring new frontiers: Challenging students in the language and literature classroom (pp. 15–29). Singapore: Pearson Longman.

Walsh, M. (2017). Multiliteracies, Multimodality, New Literacies and…. What Do These Mean for Literacy Education? In Marion Milton (Ed.), Inclusive Principles and Practices in Literacy Education, (pp. 19-33). UK: Emerald Publishing Limited.

Published

30-12-2023

How to Cite

Ratha, A., Thanalachime, P., & Selvajothi, R. (2023). Multimodal Visual Analysis of Traditional Poetry in Tamil Language Textbook: தமிழ்மொழிப் பாடப் புத்தகத்திலுள்ள மரபு கவிதைகளில் இடம்பெற்றுள்ள படங்களின் பன்முகத்தன்மை (Multimodality) . Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(2), 232–243. Retrieved from https://kpatmalaysia.com/ojs/index.php/mjt/article/view/81