Theology In ‘Vinnamutham’ Classical Poetry Collection
‘விண்ணமுதம்’ மரபுகவிதைத் தொகுப்புக் காட்டும் இறையியல்
Keywords:
‘விண்ணமுதம்’ கவிதைத் தொகுப்பு, இறையியல் சிந்தனை, இளையோர், 'Vinnamudham' poetry collection, theological thought, youthsAbstract
இந்த ஆய்வு, ‘விண்ணமுதம்’ தமிழ்க்கவிதைத் தொகுப்பில் வெளிப்படும் இறைச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வின் நோக்கம், ‘விண்ணமுதம்’ தமிழ்க்கவிதைத் தொகுப்பு நூலில் கவிதைகள் இறைச் சிந்தனைச் சார்ந்து பல்வேறு தலைப்பினில் கையாளப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் கவிஞர் தனது கவிதையில் வெளிப்படுத்திய இக்கால இளையோர்களின் இறைச் சிந்தனைக் கருத்துகளைக் கண்டறிந்து ஆய்வு செய்வதேயாகும். இவ்வாய்வு, பண்புசார் அணுகுமுறையில் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வுக்கான தரவுகள் யாவும் நூலக ஆய்வு அணுகுமுறையில் கையாளப்பட்டுள்ளது. நூலக ஆய்விற்கு ஏற்புடைய நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி விளக்கவியல் அணுகுமுறையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் வழி ‘விண்ணமுதம்’ கவிதைத் தொகுப்பில் இறைச் சிந்தனை இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாய்வுக்குத் தேர்வு செய்யப்பட்ட 'விண்ணமுதம்' ஒரு மரபுகவிதைத் தொகுப்பு நூலாகும். இக்கவிதைத் தொகுப்பின் எழுத்தாளர் இளங்கவிஞர் சரண் சுக்லாம் ஆத்மலிங்கம் என்கிற விண்ணமுதன். 2021ஆம் ஆண்டு இந்நூல் வெளியீடு கண்டுள்ளது. விண்ணமுதம் கவிதைத் தொகுப்பு 106 பக்கங்களில் மொழி, குமுகாயம், இயற்கை, இறை, உறவுகள், காதல், வாழ்த்து, பல்சுவை ஆகிய எட்டு பிரிவை உள்ளடக்கிக் கவிதைகள் பல தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. மலேசிய நாட்டில் இளங்கலைப்பட்டப் படிப்பு மாணவன் வெளியிடும் முதல் மரபுகவிதை நூல் எனும் வரலாற்றுப் புகழ் பெற்றது இந்நூல்.
This study was carried out based on the theological thought expressed in the collection of Tamil poetry 'Vinnamudam'. The purpose of this research is that the poems in the 'Vinnamudham' anthology of Tamil poetry have been dealt with on various topics depending on theological thought. Based on this, the poet expressed in his poetry the desire to find and analyse the religious ideas of the youth of this generation. This study was carried out using a qualitative approach. All the data for this review was handled using a bibliographic approach. This research has been carried out using a descriptive approach, which involves using books, research articles, and library research. Through this study, we can know that there is divine thought in the poetry collection 'Vinnamudam'. 'Vinnamudham' is a collection of traditional poetry selected for this review. The author of this collection of poems is Sharan Shuklam Atmalingam @ Vinnamudhan. The book was published in 2021. The 'Vinnamudam' poetry collection has 106 pages and includes eight sections, namely Language, Society, Nature, Religion, Relationships, Love, Greetings, and Palsavai. This book has the historic reputation of being the first book of classical poetry published by an undergraduate student in Malaysia.
Downloads
References
Webster, J. (2015). What Makes Theology Theological? Journal of Analytic Theology, 3, 17-28.
ஓர் ஆய்வு (Doctoral dissertation, Jabatan Pengajian India, Fakulti Sastera dan Sains Sosial, Universiti Malaya, 2010/11.).
நவீன் கணேசன். (2022). விண்ணமுதம் தமிழ்க்கவிதைத் தொகுப்பில் பன்முகச் சிந்தனை: Research Gate.
நிரஞ்சனி தசரதன். (2011). கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் இறையியல் சிந்தனை:
விண்ணமுதன். (2021). விண்ணமுதம் (கவிதைத் தொகுப்பு). பேரா: சரண் சுக்லாம் ஆத்மலிங்கம்.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

