Ethics in Ancient Poems

மரபு பாக்களில் ‘வாழ்வியல் இலக்கணம்’

Authors

  • Ella Krishnamurthy Mr

DOI:

https://doi.org/10.1315/mjt.v1i1.32

Keywords:

மரபுப் பா, வாழ்வியல், இலக்கணம், traditional poem, grammar, lifestyle

Abstract

மனிதன் எவ்வளவுதான் அறிவியல் கண்டுபிடிப்புகளால் முன்னேறிச் சென்றாலும் தம்முடைய அறிவாற்றலால் இயற்கையை மாற்றவியலாது என்பது உண்மை. பல்லாயிரம் ஆண்டுகளாக இவ்வுலகம் பல மாற்றங்களை அடைந்து வந்தாலும் சில முக்கிய மரபினை அறிந்தோ அறியாமலோ அப்படியே கடைபிடித்து வருகிறது. உலகில் வாழும் தாவரம், விலங்கினம், மனிதன் அனைத்திற்குமான வறையரைகொண்டு வாழ்வதே சிறப்பாகும். பண்டைய கால இலக்கிய நூல்கள் படைக்க வழிகாட்டியாக இருந்த பல்வேறு இலக்கண நூல்கள் எவ்வாறு இருந்து வருகின்றன என்பதையும் உலகிலுள்ள உயிரினம் மற்றும் பல்லின மக்கள் தத்தம் கடமைகளை செறிவாக செய்ய வேண்டும் என்பதையும் ஒப்புமையோடு விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தற்கால அதிநவீன மனிதன் கூடுமானவரை தொன்றுதொட்டு இருந்துவரும் மரபினை மாற்றியோ பிளந்தோ புதுவகை தாவரங்களையும் உயிரினங்களையும் உணவிற்காகவும் பிறவற்றிகாகவும் உருவாக்க முயற்சி எடுக்கும்போது பல்வேறு பக்க விளைவுகளையும் சந்திக்கிறான். அவற்றுள் உலக மக்கள் வாழ தேவையான அடிப்படை ஆற்றல்களை இயற்கை நமக்கு வழங்கியிருந்தாலும் அந்த ஆற்றலை மனிதன் பிற ஆற்றலாக மாற்றும்போது வரும் இன்னல்களை மறந்துவிட முடியாது. இலக்கியம் படைக்கும் முறையை எப்படி தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் விவரிக்கின்றனவோ, அவ்வாறே இலக்கிய நூல்களில் குறிப்பாக நீதிநூல்கள் மனிதன் கடைபிடிக்க வேண்டிய அனைத்து வாழ்நாள் இலக்கணங்களையும் கூறியுள்ளதால் அவற்றை பின்பற்றி வாழும் மனிதனே நிறைவான வாழ்க்கையை வாழ்கிறான் என்பது உண்மை. வாழ்ந்து மறைந்த பின்னும் பலரால் போற்றக்கூடிய பெருவாழ்வை பெற்றுள்ளான் என்பதை வரலாறுகள் விளக்குகின்றன.  சிறுவயது முதல் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டியவற்றை குறளடி, சிந்தடி, அளவடி, கழிநெடிலடி என படிப்படியாக உருவெடுத்து அதிகபட்சமாக ஓரடிக்கு 192 சீர்களோடு மொத்தம் 4 அடிகளே கொண்ட வள்ளலார் இயற்றிய திருவடிப்புகழ்ச்சி போல் நிறைவாக வாழ மரபென்னும் இலக்கணம் இன்றியமையாததாகும்.

 

This article explains with analogy how the various grammar books that were a guide for the creation of ancient literary texts and how the world's creatures and diverse people should perform their respective duties intensively. As modern man attempts to modify or cross-breed as much as he can to create new types of plants and organisms for food and other purposes, he faces various side effects. Although nature has provided us with the basic energies necessary for the people of the world to live among them, we cannot forget the hardships that come when man converts that energy into other energy. As the grammar books like Tolkappiyam and Nannul describe the method of creating literature, similarly in the literary books, especially the books of scriptures, it is true that the person who lives by following them lives a fulfilling ethic life. Histories show that even after his death he had a long life that was admired by many. Otherwise, if we don't stop the wild flood by building banks and dams, the fresh water from hills and mountain and rain falls will mix into the sea and be wasted. Similarly, the literature created for entertainment and temporary diversion will be easily and quickly forgotten by the people. Traditional way of writing and living is essential for everyone to live a complete life like an unique poem which contains single stanza Tiruvadipupkazhchi composed by Vallalar with a maximum of 192 words (seers) per line with a total of 4 lines which are to be followed from childhood and throughout life as couplets, sonnets, etc., (in Tamil Kuraladi - 2 lines, Sinthadi – 3 lines, Alavadi – 4 lines, Ghazinediladi – 5 lines onwards).

Downloads

Download data is not yet available.

References

Kanakaraj, S. (2016). The Tamil Classic TOLKAPPIYAM: Its Antiquity and Universal Appeal. Indian Literature, 60(1 (291)), 184–191. http://www.jstor.org/stable/44478927

அருந்தவராஜா, க., மங்களரூபி, & சிவகுமார். (2016). திருக்குறள்-திருக்குர்ஆன் வகுத்துள்ள அறநீதிக்கோட்பாடுகள் சமூகவரலாற்று நோக்கில் ஒப்பியல் ஆய்வு.

அருள்நந்தி தம்பிரான். (1951). திருமந்திரம். திருமகள் பதிப்பகம்; தமிழ்நாடு.

இராமசுப்ரமணியம், ஏ. (2009). பதினெண் கீழ்க்கணக்குத் தொகுதி 1, செல்லப்பா பதிப்பகம், மதுரை.

சொக்கலிங்கம், சு. (2003). ஆசாரக்கோவை, வானதி பதிப்பகம், சென்னை.

Published

07-06-2023

How to Cite

Krishnamurthy. (2023). Ethics in Ancient Poems: மரபு பாக்களில் ‘வாழ்வியல் இலக்கணம்’. Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(1), 137–146. https://doi.org/10.1315/mjt.v1i1.32