The values of life found in the Kavithai Pozhil Poetry Collection

கவிதைப் பொழில் கவிதைத் தொகுப்புக் கவிதைகளில் காணப்படும் வாழ்வியல் விழுமியங்கள்

Authors

  • Saravanan Ramachindran Mr
  • Neelavathi Samykanu Mrs
  • Mohanadass Ramasamy Dr

DOI:

https://doi.org/10.1315/mjt.v1i1.30

Keywords:

கவிதை, வாழ்வியல் விழுமியங்கள், படிப்பினை, மாணவராக்கம், மாந்தராக்கம், Poetry, Values of life, Lessons, Studentization, Humanization

Abstract

இலக்கியம் காலக் கண்ணாடி என்பர். இலக்கியத்தின் வாயிலாகவே நாம் நமது முன்னோரின் அகபுற வாழ்வியலைக் கற்றுணர முடிகிறது. அகபுற வாழ்வியல் விழுமியங்கள் நிறைந்தவை நம் இலக்கியங்கள். அகபுற வாழ்வியல் விழுமியங்களை இலக்குகளாக எடுத்தோதி அவற்றின்வழி நம் வாழ்வைச் செப்பனிட்டு நல்வழி காட்டும் அறிவுப் பெட்டகம் நம் இலக்கியங்கள். இத்தகு தொன்மை இலக்கியங்களின் வடிவமே கவிதையில் அமைந்தன என்பது நமக்கு மட்டும் பெருமை சேர்க்கும் ஒன்றாகும். தொன்மைத் தமிழ் இலக்கியங்கள் யாவும் செய்யுள் வடிவிலேயே நமக்குக் கிடைக்கப் பெற்றன. ஐரோப்பியரின் வருகைக்குப் பிறகு, உரைநடை அறிமுகம் கண்டு பெரும் வளர்ச்சி பெற்றபோதும் கவிதை தனக்கெனத் தனியிடம் பெற்று வளர்ச்சி கண்டு வந்ததை மறுக்கவியலாது. எத்தனை மொழிநடை வந்தாலும் தமிழ்மொழியின் கவிதை நடைக்கு ஒப்புநிகராக முடியாதென்பது தமிழுக்குக் கிடைத்த பேறு. தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த நம் முன்னோர் மொழியையும் சமயத்தையும் பண்பாட்டையும் தங்களோடு அடையாளங்களாகவும் அணிகலன்களாகவும் கொண்டொழுகினர். அவ்வகையில், மொழியின் உச்சமான மரபு கவிதையை மலைநாட்டில் விதைக்க மறக்கவில்லை. மலேசியக் கல்வி அமைச்சு, தமிழ் இலக்கியப் பாடத்தில் நாவல், நாடகத்தோடு மரபு கவிதையையும் ஒரு பிரிவாக இணைத்துள்ளது இதற்குத் தக்க சான்றாகும். இலக்கியப் பாடம் தொடங்கிய 1956ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை இலக்கியப் பாடத்தின் மூன்று பிரிவுகளுள் மாற்றமில்லை. அவ்வகையில் 2020ஆம் ஆண்டு தொடங்கிய இலக்கியப் பாடத்திட்டத்தில் வாடா மலர், நாவலாகவும் பிசிராந்தையார், நாடகமாகவும் கவிதைப் பொழில் கவிதைத் தொகுப்பு, கவிதையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆய்வுக்கு மூன்று நோக்கங்கள் வரையறுக்கப்பட்டன. அவையாவன; கவிதைப் பொழில் கவிதைகளில் காணப்படும் வாழ்வியல் விழுமியங்களை அடையாளங் காணல், கவிதைப் பொழில் கவிதைகளில் அடையாளங் கண்ட வாழ்வியல் விழுமியங்களை ஆராய்தல், கவிதைப் பொழில் கவிதைகளில் வெளிப்படும் வாழ்வியல் விழுமியங்களை வாழ்க்கையோடு தொடர்புபடுத்துதல் ஆகும். இவ்வாய்வு கவிதைத் தொகுப்பான கவிதைப் பொழில் கவிதைகளில் காணப்படும் வாழ்வியல் விழுமியங்கள் மாணவராக்கத்திற்கும் மாந்தராக்கத்திற்கும் எவ்வாறு துணைநிற்கின்றன என்பது குறித்து ஆராய்கிறது.

 

Literature is called the mirror of time. It is only through literature that we are able to learn the inner life of our forefathers. Our literature is full of internal values. Our literature is a repository of knowledge that takes the values of inner life as goals and guides our lives through them. It is a matter of pride for us alone that the form of such ancient literature is embodied in poetry. All the ancient Tamil literature was available to us in the form of poems. There is no denying the fact that after the arrival of Europeans, the introduction of prose and the great development of poetry has developed in its own right, and it is a privilege for Tamil that no matter how many languages there may be, the poetic style of the Tamil language cannot be compared to the style of poetry of the Tamil language! Our forefathers, who migrated from Tamil Nadu, took language, religion and culture with them as symbols and ornaments. The supreme tradition of the language has not forgotten to sow poetry in Malaya. This is evidenced by the fact that the Malaysian Ministry of Education has included traditional poetry as a section of Tamil literature along with novels and dramas. From 1956, when the literature lesson began, to the present day, there has been no change in the three sections of the literature course. In 2020, Vaada Malar (வாடா மலர்) as novel, Pisiranthaiyar (பிசிராந்தையார்), as drama, and Kavithai Pozhil Poetry Collection (கவிதைப் பொழில் கவிதைத் தொகுப்பு) as poems were selected as the texts. Three objectives were defined for the study. They are; Identifying the values of life found in poems in poetry, exploring the values of life found in poems in poetry, relating life values expressed in poems to life in poetry. This study is to explore the life values found in poems towards studentization and humanization.

Downloads

Download data is not yet available.

References

Ab Rahman, N. (2022). Wacana Budaya dan Seni dalam Puisi Melayu Moden oleh Penyair Negeri Kelantan. Malay Literature, 35(1), 83-108.

Bardazzi, M. (2023). Everything I Did I Did for Happiness. Slant Books.

Del Giudice, M., & Haltigan, J. D. (2023). A new look at the relations between attachment and intelligence. Developmental Review, 67, 101054.

Kiramany, I., Ponniah, K., & Jaiseelan, S. (2022). TEACHERS’PERCEPTIONS TOWARDS THE LITERARY TEXTS USED IN TAMIL LITERATURE SUBJECT IN 2021 IN COMPARISON TO THE TEXTS USED IN 2016. Journal of Positive School Psychology, 25-35.

Masiran, R. (2022). A Review of Parenting in A Multicultural Country: The Malaysian Experience. Parenting-Challenges of Child Rearing in a Changing Society.

Zahari, M. A. M., Amirul, A. A., Yaakub, R., & Sarudin, A. (2020). KEWAJARAN PENGGUNAAN PRODUKSI TEATER DALAM PEMBELAJARAN GENRE DRAMA MELALUI MATA PELAJARAN KESUSASTERAAN MELAYU KOMUNIKATIF: APPROPRIATENESS OF THE USE OF GENRE DRAMA THEATER IN LEARNING TOWARDS COMMUNICATIVE MALAY LITERATURE SUBJECT. Jurnal Gendang Alam (GA), 10.

Sassenberg, K., & Woltin, K. (2022). The role of values in social identity change. Current Opinion in Psychology, 43, 113-118. doi: 10.1016/j.copsyc.2022.01.018

Harpaz-Rotem, I., & Leiderman, S. (2021). The value of empathy: Examining the relations between empathy, values, and well-being. Journal of Positive Psychology, 16(6), 775-786. doi: 10.1080/17439760.2020.1861152

Roccas, S., & Sagiv, L. (2020). Value change and stability across the life span: A review and some theoretical considerations. Personality and Social Psychology Review, 24(4), 381-401. doi: 10.1177/1088868319867817

அ.கி. பரந்தாமனார், 2007. கவிஞராக, பாரி நிலையம், சென்னை.

கவிதைப் பொழில், 2020. (முரசு நெடுமாறன், தொகுப்பாசிரியர்), உமா பதிப்பகம், கோலாலம்பூர்.

சுப்புரெட்டியார். ந, 1983. கவிதை பயிற்றும் முறை, பாரி நிலையம், சென்னை.

சுப்புரெட்டியார். ந, 1988. பாட்டுத் திறன், ஸ்டார் பிரசுரம், சென்னை.

மலேசியத் தேர்வு வாரியம், 2020. மலேசியக் கல்வி அமைச்சு.

வரதராசன். மு, 1972. தமிழ் இலக்கிய வரலாறு, பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட்., சென்னை.

வரதராசன். மு, 1949. திருக்குறள் தெளிவுரை, பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட்., சென்னை.

Published

07-06-2023

How to Cite

Saravanan, Neelavathi, & Mohanadass. (2023). The values of life found in the Kavithai Pozhil Poetry Collection: கவிதைப் பொழில் கவிதைத் தொகுப்புக் கவிதைகளில் காணப்படும் வாழ்வியல் விழுமியங்கள். Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(1), 116–129. https://doi.org/10.1315/mjt.v1i1.30