Study On T̪ogainilat̪t̪oder Found in Vinnamudam Traditional Poetry Collection

விண்ணமுதம் மரபுகவிதைத் தொகுப்பு நூலில் தொகைநிலைத்தொடர்: ஓர் ஆய்வு

Authors

  • Punithambigai Selvaraju Ms

DOI:

https://doi.org/10.1315/mjt.v1i1.26

Keywords:

மரபுகவிதை, இலக்கணம், தொகைநிலைத் தொடர், கருத்துப் பிழை, traditional Poetry, Grammar, t̪ogainilat̪t̪oder, vinnamudam

Abstract

விண்ணமுதம் மரபுகவிதைத் தொகுப்பு நூலில் தொகைநிலைத் தொடரை ஆராய்தல் என்பதே இவ்வாய்வின் தலைப்பாகும். இலக்கியத்தில் இலக்கணப் பயன்பாடு சரியாகக் கையாளப்படாவிட்டால் பொருள் சிதைவும் கருத்துச் சிதைவும் ஏற்படும். குறிப்பாக, தொகைநிலைத் தொடர் தன்னகத்தே தொக்கி வரும். அதனை விரித்துத் தொகாநிலையாகப் படித்தால் பொருள் புரியும். தொகைநிலைத்தொடர் என அடையாளங்காண இயலாமைக் கவிதையை வாசிக்கும் போது ஏற்படும். இதனால், கூறவரும் கருத்தைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படும். இச்சிக்கலை அடிப்படையாகக் கொண்டே இவ்வாய்வின் நோக்கம் அமைந்துள்ளது. இவ்வாய்வின் நோக்கமானது, விண்ணமுதம் கவிதைத் தொகுப்பில் உள்ள மரபுகவிதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள தொகைநிலைத் தொடர்களை அடையாளங்கண்டு அதனை வகைப்படுத்தி, அதன் பயன்பாட்டை விளக்குதல் ஆகும். இவ்வாய்வு பண்புசார் அணுகுமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 101 கவிதைகளைக் கொண்ட இக்கவிதைத் தொகுப்பு நூலிலிருந்து மொழி, குமுகாயம், இயற்கை, உறவுகள், இறை, காதல் என ஆறு கருப்பொருள்களின் அடிப்படையில் அமைந்த கவிதைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. சேகரித்த தரவுகள் யாவும் நூலாய்வின் அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளன. மேலும், இணையக் கட்டுரைகள், வழிகாட்டி நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவையும் இவ்வாய்வுக்கு வழிகாட்டியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மரபுகவிதையில், இலக்கணக் கூற்றான தொகைநிலைத் தொடரின் சரியான பயன்பாட்டின் அவசியத்தை விளக்கவும் வருங்காலத்தில் மேற்கோள் ஆய்வாகவும் இந்த ஆய்வு அமையும்.

 

This study entitled the usage of t̪ogainilat̪t̪oder found in vinnamudam traditional poetry collection. The inability to identify t̪ogainilat̪t̪oder occurs when reading a poem. If grammatical usage is not handled correctly in literature, distortion of meaning can occur. The objectives of this study are based on this problem which is identified earlier. The aim of this study is to identify and classify the t̪ogainilat̪t̪oder used in traditional poems in vinnamudam poetry collection and explain its use. This study has been carried out in qualitative approach. Poems based on six themes such as language, community, nature, relationships, religion, and love have been analysed from this collection of 101 poems. All the data included in the study were collected based on the objective of the study. All the collected data are categorized and analysed based on text analysis method. Also, internet articles, books and research papers have also been used as a guide for this review. At the end of this study, a total of 51 t̪ogainilat̪t̪oder words were identified and explained. This study will serve as a future citation study to illustrate the need for correct use of the grammatical prepositional phrase in traditional poetry.

 

Downloads

Download data is not yet available.

References

இராஜேஸ்வரி. (1992), மொழிபெயர்ப்பியல் ஆய்வு, செல்லையா பதிப்பகம், மதுரை

சரண் சுக்லாம், ஆ,. (2021), விண்ணமுதம், சரண் சுக்லாம் ஆத்மலிங்கம், பேரா.

சீனி நைனா முகம்மது,செ., (2014), தேன்கூடு, உங்கள் குரல் எண்டர்பிரைசு, பினாங்கு.

சீனி நைனா முகம்மது,செ.,(2015),நல்ல தமிழ் இலக்கணம், உங்கள் குரல் எண்டர்பிரைசு, பினாங்கு.

சீனி நைனா முகம்மது,செ., (2002), உங்கள் குரல்(ஆகசுட்டு மாத இதழ்), உங்கள் குரல் எண்டர்பிரைசு, பினாங்கு.

சீனி நைனா முகம்மது,செ., (2004), உங்கள் குரல்(சனவரி மாத இதழ்), உங்கள் குரல் எண்டர்பிரைசு, பினாங்கு.

தமிழண்ணல் (2009),2ம் பதி. தொல்காப்பியம் மூலமும் கருத்துரையும், சிந்தாமணி பதிப்பகம், மதுரை.

Aran International e-Journal of Tamil Research | அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ். (n.d.). Www.aranejournal.com. Retrieved April 30, 2023, from https://www.aranejournal.com/article/5895#

Kalaiselvam, S., & Sankareswari, B. (2021). பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் இடர்பாடுகள். Journal of Valartamil, 2(1), 103-116. https://doi.org/10.37134/jvt.vol2.1.8.2021

says, M. ram. (2015, December 28). நக்கீரநோக்கில் நற்றமிழ்ப்புணர்ச்சியிலக்கணம். வல்லமை. https://www.vallamai.com/?p=65055&cpage=1

Published

07-06-2023

How to Cite

Punithambigai. (2023). Study On T̪ogainilat̪t̪oder Found in Vinnamudam Traditional Poetry Collection: விண்ணமுதம் மரபுகவிதைத் தொகுப்பு நூலில் தொகைநிலைத்தொடர்: ஓர் ஆய்வு. Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(1), 89–95. https://doi.org/10.1315/mjt.v1i1.26