An Investigation into Tamil Cinema Songs on Poetic Values and Grammar
தமிழ்த்திரையிசைப் பாடல்களில் மரபிலக்கணக் கூறுகளும் கவித்துவமும்
DOI:
https://doi.org/10.1315/mjt.v1i1.25Keywords:
கவிதை, கவித்துவம், சொல்லாட்சி, திரைப்பாடல், Kurunthokai, Kabilar, Psychological, approachAbstract
புகழ்பெற்ற திரைப்படப் பாடல் வரிகளில் காணப்படும் மரபுகவிதையின் கூறுகளையும் கவித்துவத்தையும் அடையாளம் காண்பதே இவ்வாய்வின் நோக்கமாகும். 1940 முதல் 2023 வரை வெளிவந்த திரைப்படப் பாடல்களில் ஒவ்வொரு 20 ஆண்டுக் கால இடைவெளியில் புகழ்பெற்ற 5 பாடல்களை மட்டும் ஆய்வுக்கான கால அளவு கருதி இணையம், முகநூல், வலையொளி வழி அடையாளம் காணப்பட்டு மொத்தம் 20 பாடல்கள் ஆய்வுக்குத் தேர்வு செய்யப்பட்டன. இந்த 20 பாடல்களில் காணப்படும் கவித்துவம், மரபிலக்கணக் கூறுகள் அடையாளம் காணப்பட்டன. கவிதை, கவித்துவம், மரபிலக்கணக் கூறுகள் குறித்த தெரிவல்கள் அனைத்தும் அச்சு ஊடகங்களிலும் இணைய ஊடகங்களிலும் வெளிவந்த நூலாய்வின் வழியாகவே பெறப்பட்டன. சாதாரண மக்களின் மனத்தினில் எப்போதும் நின்று அவர்களின் விருப்பப் பாடலாக விளங்கும் சில திரைப்படப் பாடல் வரிகளில் காதல், அன்பு, பாசம், ஏமாற்றம், கவலை, பிரிவுத் துயரம், வீரம், பற்று, தோல்வி என மனிதமன உணர்வுகளோடு ஒன்றிப்போகும் அளவுக்கு அந்தப் பாடல்களில் நிறைந்துள்ள கருத்துக்கள் சிறந்த சொல்லாட்சி, கற்பனை, உவமை, உருவகம், சிலேடை மூலம் சந்தத்தோடும் ராகத்தோடும் வெளிபடுத்தப்படுவதால் திரைப்படப்பாடல்கள் சாதாரண மக்களின் நினைவுகளில் நிலைக்கின்றன என்பதை இந்த ஆய்வு கண்டறிகிறது. பல்லாயிரக்கணக்கான பாடல்களில் எல்லாப் பாடலையும் மக்கள் நினைவில் கொள்வதில்லை. மேலும், திரைப்படப்பாடல்களில் மரபு பாக்களின் தாக்கம் அமைவதற்குப் பெரும்பாலான கவிஞர்கள் பெற்ற மரபிலக்கணப் பயிற்சியும் ஒரு காரணம். எனவே, காலங்கள் மாறினாலும் திரைப்பாடல்களில் மரபு பாக்களின் தாக்கம் இல்லாமல் இருக்காது. கவித்துவத்தின் தேவையும் குறையாது என்பதை இந்த ஆய்வு புலப்படுத்துகிறது. மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கும் மரபிலக்கணம் கற்பிக்கப்பட வேண்டுமாயின் கருத்துள்ள மரபு சாயல் உடைய திரைப்பாடல்களைத் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தலாம். மொழிமீது ஈர்ப்பு அதிகரிப்பதோடு மாணவர்கள் கவித்துவ இன்பத்தையும் அனுபவிக்க முடியும்.
The purpose of this study is to identify elements of conventional poetry and poetics found in popular film lyrics. Among the film songs released from 1940 to 2023, only 5 famous songs were identified in every 20-year interval, and a total of 20 songs were selected for the study. The poetic and grammatic elements found in these 20 songs were identified. Information on poetry, poetics and classical grammar elements were all obtained through literature review in print media and online media. There are some songs that always stand in the minds of common people and become their favourite songs. The lyrics of the movie songs are so much united with the human feelings like romance, love, affection, disappointment, anxiety, separation grief, heroism, attachment, failure and etc. The ideas contained in the songs are excellent rhetoric, imagination and allegory while the metaphor is expressed through the pun with rhythm and rhymes. This shows that film songs remain in the memories of common people due to these factors. Though tens of thousands of songs are released people don't tend to remember every song but the lyrics with good melody lingers in their minds. The influence of traditional poems on film songs is just inevitable. One of the reasons for this is the traditional poem writing training that most of the film song writers received. Times may have changed but the influence of traditional poems in cinema songs still remain. This study shows that the need for traditional poetry does not diminish even in cinema lyrics. The traditional poetry grammar should be taught to school children and Tamil-language cinema songs with a traditional poetry touch can be used in teaching and learning. This initiative will increase students' interest in language learning and can also help enjoy poetic pleasure.
Downloads
References
Pachaibalan, N. (2013). Exams (தேர்வுக்களம்). Malaysia: Percetakan Sri Maju Publications.
Shahram Heschmat (2019), 6 reasons why we enjoy listening to sad music. https://www.psychologytoday.com/intl/blog/science-choice/201905/6
அபிலாஷ் (2014): திரையிசைப் பாடல்களில் கவித்துவம் (2) – வைரமுத்து http://thiruttusavi.blogspot.com/2015/06/2.html 12 மார்ச்சு 2023
அனுமந்தன், என்.ஆர். (2013). புதுமைப்பித்தன் கவிதைகள்- ஒரு சமகாலப் பார்வை. சொல்வனம் இதழ் 293. https://solvanam.com/2013/03/23. 18 மார்ச்சு 2023
ஆசை (2014). பிரமிளின் கவித்துவம் https://www.hindutamil.in/news/literature/2362-.html. 23 மார்ச் 2023
ஆலிஸ், ஆ. (tamil.vu). கவிமொழி. https://www.tamilvu.org/ta/courses-degree-a051-a0514-html-a051442-10100 10 ஏப்ரல் 2023
இரவீந்திரன், வெ. (2017). கவித்துவம் என்றால் என்ன ? மணிவாசகர் பதிப்பகம்: சென்னை-108.
இளங்கோ, நா. (2006). தொல்காப்பிய கவிதையியல் நோக்கில் பண்ணத்தி. https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://ejournal.um.edu.my/index.php/tamilperaivu/article/download 12 மார்ச்சு 2023
ஏழை மக்களின் இலக்கியம் சினிமா பாடல்கள்தான் https://m.dinamalar.com/detail.p hp?id=1052128 12 மார்ச்சு 2023
கவிதை https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88 20 மார்ச்சு 2023
கவிதை பற்றி எம் யுவன் - ஜெயமோகன் உரையாடல் (1,2,3) https://groups.google.com/g/panbudan/c/anH9qP1tgQI/m/7YLXrH8mDocJ 12 மார்ச்சு2023
கவிதையின் இலக்கணம் -நன்னூல் (2019). http://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_.html?m=1 14 மார்ச்சு /2023
சியாமளா தேவி, மா. (2016). தொல்காப்பியமும் புதுக்கவிதையும். https://www.vallamai.com/?p=73877 20 மார்ச்சு 2023
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் https://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031551.htm 12/3/2023
பாமா பெரியசாமி. (2018). கவிதை கற்பித்தலை எளிதுப்படுத்தும் தமிழ்த் திரையிசைப் பாடல்கள். மூவாலிம் சமூக அறிவியல் மற்றும் மனிதவியல் ஆய்விதழ், 2(4), 302-314.
பாலகணேசன் (2020). திரைப்பட பாடல்களில் அணிநயம் http://anthakakavi.blogspot.com/2020/06/blog-post.html 12 மார்ச் 2023
மரபுகவிதையின் முன்னோடி யார்? மரபுகவிதையின் கூறுகள் எவை? http://gopalakrishnanksah.blogspot.com/2012/07/btm-3108.html?m=1 12 மார்ச்சு 2023
ஜெயந்தன், ஆர்.சி (2009). நவீன கவிதைக்காரகளுக்கு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒருபோதும் இடம் கிடைக்காது. கவியரசு நா.காமராசனுடன் ஒரு நேர்காணல். https://www.tamilauthors.com/10/1.html 20 மார்ச்சு2023
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

