Rhetorical Grammar in Paralai Vinayakar Pallu
பறாளை விநாயகர் பள்ளுவில் இலக்கணம்
DOI:
https://doi.org/10.1315/mjt.v1i1.22Keywords:
பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு, யாப்பிலக்கணம், அணியிலக்கணம், Pallu, Paralaivinayakar Pallu, Prosodical, Rhetorical GrammarAbstract
ஈழத்திலக்கிய வரலாற்றில் ஒல்லாந்தர் காலத்தெழுந்த பள்ளுப் பிரபநதங்களுள் முக்கியமானதும் நல்லூர் சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பட்டதுமான பறாளை விநாயகர் பள்ளானது பறாளை வாழ் ஐங்கரனை தலைவராக கொண்டு மருத நிலங்களில் வேலையாட்களாக இருந்த பள்ளர்களின் வாழ்க்கை முறையை பாடுபொருளாக கொண்டு இயற்றப்பட்டது. இவ்விலக்கியம் யாப்பிலக்கணம்,அணியிலக்கணம் பிசகாத பாடல்களை அள்ளித்தந்துள்ளது. பாடலுக்களிற்கு அழகு சேர்க்கும் வகையில் அணிஇலக்கணத்தின் சொல்லணி பொருளணி ஆகியவற்றில் பொருளணிகளில் உவமை அணி,உருவக அணி ,தற்குறிப்பேற்ற அணிகளை கையாண்டு பாடல்களை மெருகேற்றியுள்ளமை சிறப்பாகும். அத்துடன் சொல்லணிகளான எதுகை ,மோனை போன்றவற்றினையும் சிறப்பாக இணைத்து பாடல்களை ஆக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து யாப்பிலக்கணத்தில் பா, பாவினங்கள் ,இசைப்பாடல்களை கையாண்டு செய்யுள்கள் படைக்கப்பட்டுள்ளது. பா வில் சிந்தியல்,நேரிசை வெண்பாக்களும் கலிப்பாவும் பாவினங்களில் விருத்தம், தாழிசை என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் இசைப்பா வடிவமான சிந்துப்பாவும் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மேற்குறிக்கப்பட்டுள்ள அணி யாப்பு இலக்கணங்களுக்கூடாக கடவுள் வாழ்த்து, நாட்டு நகர வர்ணணை, பள்ளியர் தோற்றம், பள்ளன்தோற்றம், வாழ்க்கை முறை, பண்ணையார் தோற்றம், ஊடல், கூடல், சக்களத்திச்சண்டை, இன்னஓரன்ன பலவும் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.இவ்வாய்வின் ஊடாக ஈழத்தில் தமிழிலக்கணத்தின் யாப்பிலக்கணம்,அணியிலக்கத்தின் பயன்பாடு குறித்தும் பள்ளுஎன்ற சிற்றிலக்கியத்தின் உருவமைப்பு குறித்தும் இந்த ஆய்வினூடாக ஆய்ந்து அறியக்கூடியதாக உள்ளது.
Paralai Vinahyaka Pallu that was composed by a poet called Scholar Sinnathamby of Nallur during Dutch period, is one of the important literatures in the literary history of Ealam. It makes Lord Ainkaran worshipped in the village of Paralai as the hero and means the way of life of Pallar community working in agricultural lands. It gives plenty of lyrics with impeccable yapilakkanam and Aniyilakkanam. Yappilakkanam songs have been created using pa and musical songs. It is noteworthy that sindhial, straight venpas and kalippa have been used in the pa, virutham and talisai, and Sindhuppa, an musical form, has also, The above -mentioned team is a great greeter, city commentary, pallan appearance, pallar committee lifestyle, farm appearance,are recognised.
Downloads
References
சின்னத்தம்பிப்புலவர் (2016)பறாளை விநாயகர் பள்ளு பதிப்பு பிரதேச செயலகம் சங்கானை
கலாநிதி துரை மனோகரன் (1999) பள்ளு இலக்கியமும் பாமரர் வாழ்வியலும் வெளியீடு இந்துப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்.
முனைவர் ய. மணிகண்டன் (2001) தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி விழிகள் பதிப்பகம்
முனைவர் தெ.ஞானசேகரன்(206) பள்ளு இலக்கியம் பாரதிக்கு வெளியே பதிப்பு. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

