The Sangha Poetry, Manifest Physical Expression Of The Emotions, Of Eight Kinds, - Weeping

சங்க மரபு கவிதைகளில் மெய்ப்பாட்டியல் – அழுகை

Authors

  • K. Durgadevi Dr

DOI:

https://doi.org/10.1315/mjt.v1i1.15

Keywords:

மெய்ப்பாடு, அழுகை, பசப்பு, பசலை, பசத்தல், Sangam literature, Talaivaṉ, Talaivi, Pasalai, Pasal, Pasatal

Abstract

சங்க இலக்கியப் பாடல்கள் மனத்துடன் தொடர்பு கொள்ளும் மெய்ப்பாடுகளுடன் விளங்குகின்றன. மெய்ப்பாடுகளின் வகை, எண்வகை மெய்ப்பாடுகள், ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள், ஏனைத்திணைக்குரிய மெய்ப்பாடுகள், புறனடை என ஐவகையாகப் பிரித்துத் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் கூறியுள்ளார். தலைவன் தலைவி பண்பு நலன்களில் வெளிப்படும் அழுகை என்னும் மெய்ப்பாடு சங்க அக இலக்கியங்களில் வெளிப்படும் விதத்தினை இவ்வாய்வுக் கட்டுரையில் காண்போம். அழுகை எனும் மெய்ப்பாடு இழிவும், இழத்தலும், அசைதலும், வறுமையும் என நான்கிடத்தில் தோன்றும் என்பார் தொல்காப்பியர். கலங்குதல், நெகிழ்தல் ஆகிய தன்மைகளால் கண்களில் ஒளி மழுங்குதலும் ஒளிகுறைதலும் ஏற்பட்டு வாட்டம் தோன்றி கண் கலங்கி கண்ணீர் வெளிப்படும். சங்க இலக்கியங்களில் கண்கள் கலங்குவது, அழுவது போன்றவற்றை குறிப்பிட பசப்பு, பசலை, பசத்தல் ஆகியச் சொற்கள் கையாளப்பட்டுள்ளன. பசலையானது கண் என்னும் உறுப்புடன் தொடர்பு கொண்டுள்ளதால் தம்மீது அன்பு கொண்டவர்கள் தம்மைவிட்டுப் பிரியும்பொழுது கண்கள் கலங்கி கண்ணீர் வருவதால் பசலை, பசப்பு, பசத்தல் என்ற சொற்கள் அழுகையைக் குறிப்பதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தலைவன் தலைவி இவர்களுக்கிடையே பிரிவு உண்டாகும் போதும், பிரிவின் பின்னும் வெளிப்படும் உணர்வுகளில் அழுகை வெளிப்படுவதை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, புறநானூறு போன்ற சங்க இலக்கியப்பாடல்கள்வழி அறியலாம். சங்க மரபுக்கவிதைகளின் எண்வகை மெய்ப்பாடுகளுடள் அழுகை குறித்ததாக இவ்வாய்வு அமையும்.

 

Sangam literature songs are interpreted with truths that communicate with the mind. Tolkappiyar says that the truth of crying appears in the fourth place as disgrace, loss, agitation, and poverty. Due to agitation and flexion, light dimming, and loss of light occurs in the eyes, swelling occurs and the eyes are agitated and tears are released. In the Sangam literature, the words pasappu, pasalai, pasathal have been used to refer to eyes that are troubled and crying. As pasalai is associated with the organ called eye, the words pasalai, pasap, pasthal are used to refer to crying because the eyes are disturbed, and tears come out when those who love them leave. We can understand the crying in the feelings that emerge between the leader and the leader when there is a separation between them and after the separation, through Sangam literature songs such as Naṟṟiṇai, Kuṟuntokai, Aiṅkuṟunūṟu, Kalittokai, Puṟanāṉūṟu etc. Pasalai is a disease caused by the Talaivaṉ division to the Talaivi, as is known from the literature. However, in this article, Pasalai is associated with the organ called eye, so the words Pasalai, Pasal, Pasatal are used to refer to crying because the eyes are troubled and tearful when those who love them leave them. This review will be about crying in the numerical truths of traditional Sangha poems.

Downloads

Download data is not yet available.

References

இராசமாணிக்கனார்.மா., தமிழ்மொழி-இலக்கிய வரலாறு, சங்ககாலம், பூங்கொடி பதிப்பகம், 1963

கனம். ஜி. மெக்கென்ஜி காபன் அய்யர், தொன்னூல் விளக்கம் மூலமும் உரையும், இரண்டாம் பதிப்பு, அர்ச்.சூசையப்பர் அச்சுக்கூடம், 1891.

சோமசுந்தரனார். பொ.வே., ஐங்குறுநூறு, கழகம், 1961

தொல்காப்பியம் பொருளதிகாரம், ச.பவானந்தம் பிள்ளை, 1917.

நமச்சிவாய முதலியார், கா., இறையனார் களவியல் என்னும் இறையனார் அகப்பொருள், சி.ஆர்.என் & சன்ஸ், 1943.

வெள்ளைவாரணன். க., தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல் உரைவளம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1986.

Published

07-06-2023

How to Cite

Durgadevi. (2023). The Sangha Poetry, Manifest Physical Expression Of The Emotions, Of Eight Kinds, - Weeping: சங்க மரபு கவிதைகளில் மெய்ப்பாட்டியல் – அழுகை. Malaysian Journal of Tamil (மலேசியத் தமிழ் ஆய்விதழ்), 1(1), 32–40. https://doi.org/10.1315/mjt.v1i1.15